Thursday, 4 April 2013
தமிழன் வாழ்விடங்களும் அழிவுகளின் தொடரும் கல்வெட்டு பதிகமும்
49 தமிழ் நாடுகள்..!
(படித்துவிட்டுப் பகிரவும்)
தமிழன் வாழ்விடங்களும் அழிவுகளின் தொடரும் கல்வெட்டு பதிகமும் ....
"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".
- கி பி 1478 சுபதிருஷ்டிமுனிவர்
(திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டு)
ஈழத்தின் தலைநகரம் மிகத் தொன்மையான திருக்கோணேஸ்வரர் ஆலயம். இராவணன் காலத்துக்கு முன் சிவன் ஆதிசேடன் போர்களத்தின் களத்தில் ஏறக்குறைய 10000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தளம் . எழு பெருவள நாடுகளில் குமரி மலை முகட்டின் கிழக்கு எல்லையில் இந்த ஆலயம் அமைக்க பட்டு, தென் கயிலை என்று பெயர் பெற்றது .
பூமி சரிகின்றது என்று சிவன் அகத்தியரை அனுப்பி மிதிக்கச் சொன்னதாக புராணம் கூறும் மலை இந்த கோணேஸ்வரம். அங்கு உள்ள மலையில் கால் அடையாளம் போன்ற தடம் உள்ளது அதுவே அகத்தியர் கால் அடையாளம் என்று சொல்ல படுகின்றது..
மனுநிதி சோழன் புருஷோத்தம முதலாம் குளக்கோட்டன் கி மு 200 ஆண்டுகளுக்கு முன் நிறுவிய தளம் . சிறப்பாக 5 கால பூஜைகள் நடக்க கந்தளாய் குளத்தை நிறுவி, விவசாய வளம் பெருக்கி அவ்விவசாய நிலங்களை பராமரிக்கும் வகையில் சின்ன கோணேஸ்வரம், தம்பலகாமம் என்று ஒரு ஊரை நிறுவி தஞ்சையின் நகை பட்டின மக்களை குடியேற்றினார்.
அம்மக்கள் வணிகம் விவசாயம் என்று சிறப்பாக இங்கு வாழ்ந்தார்கள் . சிறப்பாக வாழ்ந்து திருகோணமலையின் சிறப்பை தமிழ்நாடு எங்கும் பரவச் செய்தார்கள் . கடல் தாண்டிய பயணம் என்பதால் ஒரு சிலரே துணிந்து தென்கயிலை நோக்கி வந்தார்கள் . அப்பரும் ஞானசம்பந்தரும் தமக்கு அந்த பாக்கியம் இல்லாதபோதும், இத்தளத்தின் மீது 7ம் நூற்றாண்டில் பதிகங்களைப் பாடி உள்ளார்கள்.
அதன் பின் இரண்டாம் குளக்கோட்டன் 1050 இல் இக்கோயிலை இன்னும் சிறப்பாகப் புனரமைத்து சிறப்பாக ஆக்கினான் . அதன் பின் பாண்டிய மன்னரக இருந்த குலசேகர பாண்டியன் மீண்டும் தனது திருப்பணிகளை செய்து மீன் பதித்த சிற்பங்களை கோயில் தூண்களில் செதுக்கி வைத்தான் . அந்த மாபெரும் ஆலயத்தை 1500 இல் வந்த ஐரோப்பியர் இடித்து கற்களைப் பெயர்த்து திருகோண மலை கோட்டையைக் கட்டினர். கட்டியபோது கோட்டை வாசலில் நிறுவிய கல்லில் இரட்டை மீன் சின்னமும் கல்வெட்டின் ஒரு பகுதியும் உள்ளது. அதை இன்று சிங்களவர் மை பூசி அழித்து விட துடிக்கின்றனர்.
கி.பி 1505 ல் போர்த்துக்கல் தேசவாசிகள் சிலர், பிராஞ்சிஸ்கோ தே அல்மேதா என்பவைத் தலைவனாகக் கொண்டு காலித்துறைமுகத்தை அடைந்தனர். காலித் துறைமுகம் இலங்கையின் தென் மேற்குப் பிராந்தியத்தில் உள்ளது. அப்போது தர்மபராக்கிரமவாகண் என்பவன் தென் இலங்கை அரசனாய் கோட்டைக்காடு என்னும் நகரத்திலிருந்து அரசாட்சி செய்தான். அவன் தஞ்சை மதுரை வழி வந்த குலசேகர பாண்டியனின் பேரன் . கண்டியை கடிசியாக ஆண்ட விக்கிரமா ராசசிங்கன் கண்ணுசாமியின் பூட்டன் தமிழன் .
போர்த்துக்கேயர் அவனிடம் அனுமதி பெற்று பண்டசாலை ஒன்றைக் கட்டினர். அக்காலத்தில் வளவ கங்கை வழியாக சென்று மலைக்காடுகளில் பெருமளவு வைரங்களை ஐரோப்பியர்கள் எடுத்து செல்லலாயினர். ஐரோப்பியர்கள் துருக்கி வழியாகவே இலங்கையை அடைந்தார்கள் , அவ்வழியாக செல்லும் காலங்களில் துருக்கியின் கொள்ளையர்கள், ஐரோப்பியர்களிடம் இருந்து வைரங்களை திருடுவது வாடிக்கையாக இருந்ததது. எனவே ஐரோப்பியர்கள் பெரும் படைகளுடன் நகரவேண்டிய நிர்பந்தங்களுக்குள் தள்ளப்பட்டு, அதுவே பேராசையாக மாறி இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் எண்ணத்தை அவர்களுக்குள் வலுவாகியது.
தர்மபராக்கிரமவாகண் ஐரோப்பியரின் சூழ்ச்சிக்குள் அகப்பட்டு ஐரோப்பியர்களை தமது நண்பர்கள் என்று கருதி நாட்டின் பாதுகாப்புப் பணிகளில் அக்கறை கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றான் .
ஐரோப்பியர்களை தொடர்ந்த துருக்கிய கொள்ளைக்காரபடை ஒன்று அப்போது தெற்கு துறைமுகம் முதலான பகுதியை முற்றுகையிட வந்து தர்மபராக்கிரமவாகண் படைகளிடம் தோற்றுப் போனது. அதற்க்கு ஐரோப்பியர்கள் பெரிதும் உதவினார்கள் என்றதால் அவர்களுக்கு தமது நாட்டில் வணிகம் செய்யும் உரிமைகளை வழங்கினான் . ஆனால் அவர்கள் செயல் திருப்தி இல்லாமையால் அவர்களை தனது பகுதிகளில் இருந்து வெளியேற்றினான் .
ஐரோப்பியர்கள் அன்று சிங்கள மன்னராக இருந்த மயாதுன்ன என்பவனிடம் நட்பைப் பேணி இருந்தார்கள். அதன் பலனாக சிலாபம் துறைமுக நிர்வாகத்தை அபிவிருத்தி செய்யும் பொறுப்புகளில் ஒரு பகுதியை சிங்கள மன்ன ன் ஒப்படைத்தான் . பின்னர் 1517 மற்றும் 1520 ஆம் ஆண்டுகளில் மீண்டும் இருமுறை துருக்கியர்கள் படையெடுத்து வந்து பறங்கியர் கட்டிய சிலாபம் துறை தளங்களை முற்றுகையிட வந்து அதிலும் தோல்வியைத் தழுவினர். இவாறான படை எடுப்புகள் அடிக்கடி நிகழ பறங்கியர் தமது படை பலத்தை பெருக்கி இலங்கையின் சிங்கள நிர்வாகத்தை மெதுவாக கைப்பற்றினர்.
பின்னர் தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போர்த்துக்கேயர் இன்னுமொரு இராட்சியத்தின் சிங்கள அரசனாகிய புவனேகபாகுவின் மகனைக் கிறீஸ்தவனாக்கி மதம் பரப்பும் எண்ணத்தோடு புவனேகபாகுவைத் தற்செயலாகச் சுட்டது போலச் சுட்டுக் கொன்றனர். தம் எண்ணம் போல புவனேகபாகுவின் மகனை, தர்மபாலாவைக் கிறீஸ்தவனாக்கினர். அரசன் எவ்வழி மக்களும் என்பது போல அரசபிரதானிகளும், மக்களுமாக கிறீஸ்தவ மதத்தைப் பின்பற்றத் தொடங்கினர். பின்னர் பறங்கிகள் மெல்ல மெல்ல இலங்கைத் தீவின் மற்றைய இடங்களையும் தமதாக்க முனைந்து வெற்றியும் பெற்றனர். முழுமையாக கைப்பற்ற பட்ட சிங்கள இராட்சியத்தில் இருந்து அடி பணிய மறுத்த தமிழர் இராச்சியங்கள் மீது பல படை எடுப்புகளை செய்து படிப்படியாக இலங்கை தீவின் தெற்கு தமிழர் தாயகங்களை கைப்பற்றினார்கள் . இலங்கையின் மிக புராதன ஈஸ்வரங்கள் எல்லாம் இடிக்க பட்டு கோட்டை களாக கட்டி எழுப்ப பட்டன . இவ்வாறு கட்டப்பட்ட கோட்டைகள் திருகோணமலை , பூநகர் , யாழ்ப்பாணம் , கீர்மலை , முநேவரம் , தள்ளாடி , கோட்டை காலாறு , என்று பலவும் புரதான வழிபட்டு தளங்களின் இடுபாடுகளின் எச்சமாக இன்றும் இருகின்றன .
தமிழரின் யாழ்ப்பாண இராச்சியம் அன்று கனக சூரிய சிங்கையாரியான் ஆட்சியில் சிறப்பாக இருந்தது . அவனது மூத்த மகனான பரராஜசேகரன் கி.பி 1478 ஆம் ஆண்டு சிங்கைப் பரராஜ சேகரன் என்ற சிம்மாசனப் பெயரோடு மன்னனானான். நல்லூரை மேலும் சிறப்பு மிக்க நகராக்கியவன் சிங்கைப் பரராஜசேகரன். இவன் மாமன்னன புருசோத்தமன் வாரிசாவான் . இவனை புருசோத்தமன் என்றும் சொல்வதுண்டு . போர் திறனும் கலைத்திறனும் கொண்ட சிங்கைப் பரராஜசேகரன் பல குறு நில மன்னர்களின் படை எடுப்புக்களை அங்காங்கே சந்தித்து அவர்கள் பல அழிவுகளை செய்த போதும் , அழிவிலிருந்த ஆலயங்களை இவன் புனருத்தாரணம் செய்திருப்பதாகக் கொள்ள இடமுண்டு. சட்ட நாதன் கோயில் வெயுலுகந்தப் பிள்ளையார் கோயில், கைலாயநாதர் கோயில், வீரமாகாளியம்மன் கோயில் என்பனவற்றை இவன் மீண்டும் புனரமைத்தான் எனக் கொள்ளல் வேண்டும்.
ஒரு இக்கட்டான கால சூழலில் பரங்கியர்கள் ஆக்கிரமிப்பும், சிங்களவரின் முறை அற்ற செயலும் தன் நாட்டையும் தாய் தமிழகத்தையும் பாதிக்கப் போகின்றது என்று பரராஜசேகர மன்னன் பெரும் கவலை உற்றிருந்தான் . தனக்கு பின் இந்த நாடு என்ன ஆகுமோ என்னும் கவலை அவனை துயரக்கடலில் மூழ்கச் செய்தது. . பரராஜசேகர மன்னனுடைய ஆட்சியைப் பொற்காலம் என்றே ஈழவரலாற்று நூல்கள் வருணிக்கின்றன. இப்படிப் பரராஜசேகரன் ஆட்சி செய்து வருகையில் சுபதிருஷ்டிமுனிவர் என்பார் தமிழகத்தில் இருந்து அவன் சபைக்கு வந்தார். அவன் அவரை வணங்கி வரவேற்று, முனிவரிடம்
"அடியேன் இவ்விராச்சியத்துக்கு இனி யாது நிகழுமென்றறியப் பேராசையுடையேன். திரிகாலமும் உணர்ந்த நீங்கள் சொல்ல வேண்டும் "
என வினவினான்.
புருஷோத்தம நீ புண்ணியவான், நீ இருக்கும் வரைக்கும் உன்னுடைய அரசு குறைவின்றி நடக்கும். அதன் மேல் உனது மூத்த குமாரன் நஞ்சூட்டிக் கொல்லப்படுவான். இரண்டாங் குமாரன் வெட்டுண்டு இறப்பான். இரண்டாம் பத்தினியின் வயிற்றிற் பிறந்த சங்கிலியன் நாட்டுக்காக போராடி முடியாது. பறங்கியர் கையிற் நாட்டை இழந்து இறப்பான். பறங்கிகள் சிவாலயங்களை அழித்துத் தமது சமயத்தைப் பரப்பிக் கொடுங்கோலாக்கி நாற்பது வருசம் ஆள்வர். அவரை ஒல்லாந்தர் வென்று சமய விசயத்தில் அவரைப் போற் கொடியராகி நூற்றிருபது வருசம் அரசு செய்வர். அதன் மேல் மற்றொரு தேசத்தார் (புகைக்கண்ணர் - ஆங்கிலேயர்) வந்து ஒல்லாந்தரை ஒட்டி நீதி ஆட்சி செய்வர். உன் சந்ததிக்கு அரசு இனி ஒரு காலத்தில் மீள்வதாயின் உன் வாரிசுகள் மீண்டும் போராடியே பெறவேண்டும் என்றார்.
இதையே திருகோணமலைத் தம்பத்தில் உள்ள கல்வெட்டும் சொல்கின்றது இப்படி
"முன்னாட் குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப்
பின்னாட் பறங்கி பிடிப்பானே - பொன்னாரும்
பூனைக்கண் செங்கண் புகைக்கண்ணர் போய்மாற
மானே வடுகாய் விடும்".
இப்பாடலில் "புகைக்கண்ணர் போய்மாற மானே வடுகாய் விடும்".
இதுவே இன்று நடகின்றது...
புகைக்கண் அங்கிலேயர் 1947 போய் மாற மானே வடுகாய் விடும் ... இங்கு மானே வடுகாய் விடும் என்றால் என்ன..?! இங்கு பல குழப்பம உள்ளது. மானே வடு காய் விடும் ... மான் என்றால் இளமையான இனம் வடு என்றால் பிஞ்சு காயம். வடுகாய் காயங்கள் பட்டு ஆறும் காலம் தனில் விடும் தேர்ந்து விடும் ... என்று பல் பொருள் உண்டு .
ஆக பொன்னிறத்து மேனி கொண்ட பல் கண் அமைப்பை கொண்ட ஐரோப்பியர்கள் வந்து ஆண்டதன் பின்பு அவர்களின் பின் இளம் பிள்ளைகள் காயப்பட்டு வேதனைப் படுவார்கள் . அவர்கள் காயம் ஆறும் களத்தில் மீண்டும் காய்க்கும் பூக்கும் மாம் பிஞ்சுகள் விடும் ... உன் சந்ததிக்கு இந்த நாடு அந்த பொன்னிறத்து மேனி காரர் அவர்கள் போனாலும் உடனடியாக கிடைக்காது மாவடு போல பிஞ்சு விட்டு வரும் குழந்தைகளா காயப்பட்டு ஆறும் காலம் வரும் அப்போதுதான் உன் வாரிசுகளுக்கு உன் நாடு மீண்டும் கிடக்கும் ..!
இன்று மாணவர்கள், இளம் பிள்ளைகள் நடத்தும் இப்போராட்டமே தமிழனை மீண்டும் ஆட்சியில் ஏற்றும் என்கின்றது திருகோணமலைக் கல்வெட்டு .... என் பாட்டன் எழுதிய திருக்குறள் என்றும் காலத்துக்கு ஏற்புடைய நூலாக இருப்பது போல திருக்கோணமலைக் கல்வெட்டும் இருக்குமோ..?! பொறுத்து இருந்து பார்போம் ..!
Share
Monday, 18 March 2013
நெருங்கிப் பழகிய இரு நண்பர்கள்
நெருங்கிப் பழகிய இரு நண்பர்கள் :
குருகுலக் கல்வியை முடித்துவிட்டு,ஆளுக்கு ஒரு பக்கம் வாழ்க்கையைத் துவக்கினர்.ஒருவர் விவசாயத்தில் ஈடுபட்டார்;திருமணம் முடிந்து இல்லறதர்மத்தில் ஈடுபட்டார்.மற்றவர் ஆன்மீக ஈடுபாட்டின் மிகுதியால் துறவறம் பூண்டார்;தேச சஞ்சாரம் செய்தார்;காலச் சக்கரம் உருண்டோடியது;பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய துறவி ஊர்க்கோவிலில் தங்கி,தனது இல்லற நண்பருக்கு தன்னை வந்து பார்க்கும்படி செய்தி அனுப்பினார்.
கடமையைக் கண்ணாகக்கருதிய இல்லறத்தார் விவசாயப்பணிகளை முடித்து அன்று மாலையில் வந்து சந்திப்பதாக ஒரு செய்தியுடன்,துறவிக்கு மதிய உணவை வழங்குமாறு தன் சகதர்மபத்தினியைப் பணித்தார்.அறுசுவை உண்டி சமைத்து துறவியை நோக்கிச் சென்ற இல்லறத்தாள் திடுக்கிட்டுப்போனாள்.காரணம ் எங்கோ பெய்த கனத்த மழையால் அவ்வூர் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு.அக்கரையிலு ள்ள கோவிலை அடைவது எப்படி? என்று கணவனிடம் வந்து கேட்டாள்.
பெண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல்என்று ஒரு உபாயத்தைச் சொன்னார் இல்லறத்தார்.என்னே ஆச்சரியம்!!! அப்பத்தினிப் பெண் அப்படிச் சொல்ல,ஆறு வழிவிட்டது.அக்கரை சென்றடைந்தாள்.
தன் கணவரின் செய்தியைக்கூறி, தான் கொண்டு வந்த உணவை துறவியருக்கு விருந்தோம்பல் பண்போடு பரிமாறி உபசரித்தாள்.ரசித்து,ருசித் து உண்ட சந்நியாசி அவளுக்கு ஆசி கூறியனுப்பி வைத்தார்.ஆற்றில் அதே வெள்ள ஓட்டம்.தன் கணவர் சொன்ன அதே மந்திரத்தை உச்சரித்தாள்.ஆறு வழிவிடவில்லை;செய்வதறியாது திகைத்த அப்பெண் துறவியை அணுகி என்ன செய்வது? எனக் கேட்டாள்.
உண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல் என்று சந்நியாசி உபாயம் கூற,அப்படியே செய்தாள்.ஆஹா, ஆறு வழிவிட,இக்கரை சேர்ந்தாள்.இதுவரை இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான தன் கணவர் பெண்டு ருசி அறியாதவரா? மூக்குப்பிடிக்க உணவை ருசித்த சந்நியாசி உண்டு அறியாதவரா குழம்பிய அவள் தன் கணவரிடமே வினவினாள்.புன்முறுவலுடன் கணவர் பதிலுரைத்தார்.
காம உணர்வோடு களியாட்டம் கொள்ளாமல்,வம்சவிருத்திக்கா க முறையாக உறவு கொள்ளும் இல்லறத்தானும், வாய் ருசிக்காக உணவுக்கு அடிமையாகாமல் உணவை ருசிக்கும் துறவறத்தானும் ஒரு வகையில் ஆன்மபலம்(தவ ஆற்றல்) கொண்டவர்களே”
இந்த இல்லறத்தான் தினமும் வழிபட்டு வந்தது ஸ்ரீகால பைரவரையே! எனவே தான் இவர் இல்லறத்தானாக இருந்தும் காமத்தைக் கட்டுப்படுத்தி வாழ முடிந்திருக்கிறது.தினமும் ஸ்ரீகால பைரவரை வழிபடுபவர்கள் பைரவ உபாசகர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
குருகுலக் கல்வியை முடித்துவிட்டு,ஆளுக்கு ஒரு பக்கம் வாழ்க்கையைத் துவக்கினர்.ஒருவர் விவசாயத்தில் ஈடுபட்டார்;திருமணம் முடிந்து இல்லறதர்மத்தில் ஈடுபட்டார்.மற்றவர் ஆன்மீக ஈடுபாட்டின் மிகுதியால் துறவறம் பூண்டார்;தேச சஞ்சாரம் செய்தார்;காலச் சக்கரம் உருண்டோடியது;பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பிய துறவி ஊர்க்கோவிலில் தங்கி,தனது இல்லற நண்பருக்கு தன்னை வந்து பார்க்கும்படி செய்தி அனுப்பினார்.
கடமையைக் கண்ணாகக்கருதிய இல்லறத்தார் விவசாயப்பணிகளை முடித்து அன்று மாலையில் வந்து சந்திப்பதாக ஒரு செய்தியுடன்,துறவிக்கு மதிய உணவை வழங்குமாறு தன் சகதர்மபத்தினியைப் பணித்தார்.அறுசுவை உண்டி சமைத்து துறவியை நோக்கிச் சென்ற இல்லறத்தாள் திடுக்கிட்டுப்போனாள்.காரணம
பெண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல்என்று ஒரு உபாயத்தைச் சொன்னார் இல்லறத்தார்.என்னே ஆச்சரியம்!!! அப்பத்தினிப் பெண் அப்படிச் சொல்ல,ஆறு வழிவிட்டது.அக்கரை சென்றடைந்தாள்.
தன் கணவரின் செய்தியைக்கூறி, தான் கொண்டு வந்த உணவை துறவியருக்கு விருந்தோம்பல் பண்போடு பரிமாறி உபசரித்தாள்.ரசித்து,ருசித்
உண்டு ருசி அறியாதான் வழிவிடச் சொன்னான்’ எனச் சொல் என்று சந்நியாசி உபாயம் கூற,அப்படியே செய்தாள்.ஆஹா, ஆறு வழிவிட,இக்கரை சேர்ந்தாள்.இதுவரை இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனான தன் கணவர் பெண்டு ருசி அறியாதவரா? மூக்குப்பிடிக்க உணவை ருசித்த சந்நியாசி உண்டு அறியாதவரா குழம்பிய அவள் தன் கணவரிடமே வினவினாள்.புன்முறுவலுடன் கணவர் பதிலுரைத்தார்.
காம உணர்வோடு களியாட்டம் கொள்ளாமல்,வம்சவிருத்திக்கா
இந்த இல்லறத்தான் தினமும் வழிபட்டு வந்தது ஸ்ரீகால பைரவரையே! எனவே தான் இவர் இல்லறத்தானாக இருந்தும் காமத்தைக் கட்டுப்படுத்தி வாழ முடிந்திருக்கிறது.தினமும் ஸ்ரீகால பைரவரை வழிபடுபவர்கள் பைரவ உபாசகர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
Saturday, 16 March 2013
துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால்
தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான்.
எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.
பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான்.
மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.
நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.
முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது.
அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.
இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.
பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!
பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..
''உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.
தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.
1. 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.
2.விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.
3.தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.
4.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.
5. பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.
நீதி: பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால் பிரச்சனைகளைச் சுலபமாக முறியடித்துச் சாதனைகள் பல படைக்கலாம். இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.

Friday, 1 February 2013
பரோட்டாவின் கதை

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.
இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.
பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.
இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.
பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .
மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .
இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .
இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .
மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல
மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்
இதில் சத்துகள் எதுவும் இல்லை
குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.
Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .
மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .
நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.
இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .
இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்
. தயவு செய்து இதை பகிரவும், முடிந்த அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள்
சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி,
கண்களில் படுவதில்லை..................
அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் ஜோதிடம்\ஆன்மிகம் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை, அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை?
கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்து,
1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். “முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு”,
2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம் ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன.
இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் என பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் ஊருக்கு போய் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மண் சட்டி சுமக்கவேண்டியதுதான், இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது, அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கோயம்பேட்டில் கழிவுகளுக்கு பஞ்சமில்லை, அதைக்கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது)
அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித்துண்டங்களில் சொறுகப்படும். குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்ன வென்று இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)(சென்னையில் இது இருப்பது போல் தெரியவில்லை)

அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழகொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்துவிடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக்கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள்.
இன்னும் பல எழுதமுடியும் மற்றொன்று முக்கிய செய்தி இது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஏன் வெளியெ சொல்வதில்லை அதுதான் தமிழரின் அற்புத குணங்களில் ஒன்று முகநூலிலும் இதர இணையத்திலும் தமிழனின் பெருமையை பார் என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவான், அந்த பொய்யை இரசிக்க ஆயிரம் சேர்களும் லைக்குகளும், ஆனால் உண்மையை பகிரமாட்டான் ஏன் தெரியுமா. அடுத்தவன் எக்கேடு கெட்டுப்போகட்டும் நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் (பேருந்தில் நிற்க முடியாத நிலையில் ஒரு முதியவர் இருக்கும் போது இரண்டு வயது குழந்தையை சீட்டில் உட்கார வைத்து இடம் கொடுக்க கூறினால் குழந்தைக்கு காய்ச்சலுங்க பெரியவர் என்ன அவசர வேலையாகவா போகிறார்) காலியாக வரும் பஸ்ஸில் ஏறவேன்டியது தானே என்று சொல்லும்............................
இதை(கெட்டுப்போன மாமிசம்) அரசு எந்த அளவிற்கு தடுக்க முடியும் என்றால் முடியாத காரியம் தான் ஊறிப்போன லஞ்ச பரிமாற்றம். அரசு திட்டமிட்டால் கீழே வர வர காணாமல் போகும். ஒரு நாள் நடவடிக்கை எடுத்தால் இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து விடும் நாம் தான் இதை தடுத்து நிறுத்த முடியும் எப்படி உண்மையை எடுத்துக்கூறுங்கள் பலருக்கு தெரிவியுங்கள் கூட்டம் குறையும் போது தன்னாலேயே நல்ல பொருளை வாங்கி விற்க ஆரம்பிப்பார்கள், அப்போதுஅவர்களுக்கு துணிவு வரும் லஞ்சம் வாங்க வருபவர்களுக்கு பயப்பட தேவையில்லாமல் போகும். நல்ல மாற்றம் வரும்!
Wednesday, 30 January 2013
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :

பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ?
பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...
இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி 180rs என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது,,, மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்....
நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது .....
உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.
இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!
அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!
ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!
அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?
மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.
கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.
நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.
'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது...

Subscribe to:
Comments (Atom)

![Photo: L̲̅][̲̅I̲̅][̲̅K̲̅][̲̅E̲̅] [̲̅T̲̅][̲̅H̲̅][̲̅I̲̅][̲̅S F R Î E N D S === > வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு(Don't Trust Girls LOve)
தவறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச் சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான், நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான்.
எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான்.
பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என் மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான்.
மீண்டும் ஒருமாதம் கழித்து, மகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவி, குட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும் '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.
நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன.
முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது.
அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது.
இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.
பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்பு, பிணி,சாவு, சூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!
பிறவியிலோ, விபத்திலோ உறுப்புகளை இழந்தவர், அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர், கடைசிமுறையீடும் தோற்று, தூக்குமேடை ஏறவேண்டியவர், புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்- இவர்கள் மட்டுமன்றி, ஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய சூழலில் உள்ளவர், மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன் வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..
''உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.
தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்று, தம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள், அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.
1. 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.
2.விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும், நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.
3.தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல், கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டு, லெனினின் 'அரசும் புரட்சியும்' என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.
4.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்து, தம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.
5. பிரிட்டனில் 21 வயது இளைஞர் ஒருவர் , முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு பேச்சும், உடல்அசைவும் இழந்தும், கவலைப்படாது, சக்கரநாற்காலியில் இருந்துகொண்டு, மின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும், ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும், அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.
நீதி: பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும், பொறுமையும் வளர்த்துக்கொண்டால் பிரச்சனைகளைச் சுலபமாக முறியடித்துச் சாதனைகள் பல படைக்கலாம். இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.](https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/c0.0.823.393.43890865955/p843x403/11106_613052278708638_587754071_n.jpg)